
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்:
நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப!
ஏஷ துாத் தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா!!
யத் யத் விபூதி மத்ஸத்த்வம் ஸ்ரீமதுார்ஜித மேவ வா!
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸஸம்பவம்!!
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந!
விஷ்டப் யாஹமிதம் க்ருத்ஸ்நம் ஏகாம்ஸேந ஸ்திதோ ஜகத்!!
(விபூதி யோகம்)
பொருள்: எதிரிகளை வெல்பவனே! என் தெய்வீகமான பெருமைக்கு எல்லை இல்லை. விரிவான அதில் ஓரளவே எடுத்துச் சொன்னேன். எது சிறப்பு மிக்கதோ, எது ஒளி கொண்டதோ, எது சக்தி படைத்ததோ அந்த பொருட்கள் எல்லாம் என் ஒளியின் ஒரு பகுதி என்பதை அறிவாயாக. அனைத்து உலகங்களையும் எனது யோக சக்தி என்னும் ஆற்றலால் தாங்கி நிற்கிறேன்.