
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
யோ மாமஜ மநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்!
அஸம் மூட: ஸ மர்த்யேஷுஸர்வ பாபை: ப்ரமுச்யதே!!
புத்திர்ஜ் ஞாநமஸம் மோஹ: க்ஷமா ஸத்யம் தம ஸம!
ஸுகம் துக்கம் பவோபாவோ பயம் சாப யமேவ ச!!
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தாநம் ய ஸோயஸ:!
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:!!
பொருள்: கிருஷ்ணனாகிய என்னைப் பிறப்பு அற்றவன், ஆதியந்தம் இல்லாதவன், உலகத்தின் தலைவன் என எவன் அறிகிறானோ அவனே மனிதர்களில் சிறந்த அறிவாளி. அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.
தீர்மானிக்கும் திறன், உண்மை அறிவு, மோகமின்மை, பொறுமை, உண்மை, புலனடக்கம், இன்பம், துன்பம், பயம், பயமின்மை, அகிம்சை, நடுவுநிலைமை, மகிழ்ச்சி, தவம், தானம், புகழ், இகழ் என வெவ்வேறான பண்புகள் எல்லாம் என்னிடம் இருந்து உற்பத்தியாகின்றன.