
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
கர்மேந்த் ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்!
இந்த்ரியார்தாந்வி மூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே!!
யஸ்த்விந்த் ரியாணி மநஸா நியம்யாரப தேர்ஜுந!
கர்மேந்த்ரியை: கர்மயோகம் அஸக்த: ஸ விஸிஷ்யதே!!
பொருள்: எவன் ஒருவன் வெளித்தோற்றத்தில் புலன்களை அடக்கியதாக காட்டிக் கொண்டு, மனதில் எப்போதும் ஆசைகளை நினைக்கிறானோ அவன் பொய் நடத்தையுள்ளவன். இவனை 'ஆஷாடபூதி' என அழைப்பர். இதை விடுத்து எவன் ஒருவன் மனதால் புலன்களை தன்வசப்படுத்தி, கடமையில் கண்ணாக இருக்கிறானோ அவனே சிறந்தவன்.