ADDED : அக் 11, 2019 10:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அரிசி - ½ கிலோ
வெல்லம் - ¼ கிலோ
கடலை பருப்பு - 100 கிராம்
ஏலக்காய் - 5
தேங்காய் துருவல் - 2 முடி
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து அரைக்கவும். பின் 1 கப் அளவு தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதித்த நீரில் கடலைப் பருப்பை வேக விடவும். வெந்ததும் அரைத்த அரிசிமாவை பருப்புடன் சேர்த்துக் கிளறவும். பின்பு ஏலக்காய், வெல்லம், துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அல்வா இட்லி வடிவத்தில் வேண்டுமானால் இட்லி சட்டியிலும், டம்ளர் வடிவத்தில் வேண்டுமானால் டம்ளரிலும், அல்லது சாதாரண கின்னத்திலும் கொட்டி ஆற விடவும். 5 நிமிடத்தில் அல்வா கெட்டிப்படும்.