ADDED : ஜூன் 03, 2011 09:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசு அணிமின்கள்! உலக்கை யெல்லாம்
காம்பு அணிமின்கள்! கறை உரலை
நேசம் உடைய அடியவர்கள்
நின்று உலாவுக என்று வாழ்த்தித்
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்கிண்ணம் இடித்து நாமே!
பொருள்: பெண்களே! காசுமாலை அணிந்து கொள்ளுங்கள்! பொற்சுண்ணம் இடிக்கும் உலக்கைக்கு பூண் கட்டுங்கள்! அன்பு மிக்க அடியவர்களை 'பல்லாண்டு வாழ்க' என்ற வாழ்த்தி மகிழுங்கள். உலகம் போற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலைப் பாடுங்கள். நம் முன்வினைப் பயன்கள் அற்றுப் போகும்படி பாடி, வாசனைப் பொடி இடிப்போம் வாருங்கள்.

