ADDED : நவ 25, 2011 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வைத்த நிதிபெண்டீர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்பொடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளி வித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ!
பொருள்: அழகிய வண்டே! உலகில் வசிக்கும் மனிதர்கள், தாங்கள் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகள், பிறந்த குலம்கோத்திரம், கற்ற கல்வி ஆகியவற்றால் கர்வம் கொண்டு மயங்கித் தடுமாறுகின்றனர். அம்மயக்கத்தால் பிறப்பு, இறப்பு என்னும் மாயச் சக்கரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதிலிருந்து அவர்களைத் தெளிவிக்க வேண்டும் என்று, ஞான வடிவமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி ரீங்காரமிடுவாயாக.

