ADDED : ஜன 23, 2020 03:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 500 கி
உளுந்தம்பருப்பு - 50 கி
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 250 கி
செய்முறை: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றி மிதமாக சூடாக்கவும். ஏந்தலான கரண்டியில் (குழி கரண்டி வேண்டாம்) மாவை எடுத்து ஊற்றவும். பணியாரம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி விட்டு உடனே எடுக்கவும்.