ADDED : டிச 20, 2019 03:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையானவை:
கறுப்பு உளுந்து - 2 கிலோ
மிளகு - 50 கிராம்
பெருஞ்சீரகம் - 100 கிராம்
நல்லெண்ணெய் - 2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அனுமனுக்கு வடைமாலை செய்பவர்கள், துாய்மையாக விரதமிருந்து 'ஸ்ரீராம ஜெயம்' ஜபிக்க வேண்டும். கறுப்பு உளுந்தை ஊற வைத்து, தோலை நீக்க வேண்டும். பின்னர் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் மிளகு, பெருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.
வடையை துாய வெள்ளைக் காடாத் துணியால் தட்டி துளையிட வேண்டும். தட்டிய வடைகளை எண்ணெய்யில் போட்டு, முக்கால் வேக்காடு வரவும் எடுக்க வேண்டும். 108 வடைகள் தயாரானதும் கயிற்றில் கோர்க்க மாலை ரெடியாகிவிடும். ராகுதோஷம் நீங்க, எந்த செயலிலும் வெற்றி பெற அனுமனுக்கு வடைமாலை சாத்துவர். 27, 54 என்ற எண்ணிக்கையிலும் மாலை சாத்தலாம்.