ADDED : ஏப் 25, 2016 01:08 PM

அ நிறம் | அளவு
ஸதா பாலரூபாயி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா!
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி:!!
பொருள்: குழந்தை வடிவம் கொண்டவரே! மலை போல் தடை வந்தாலும் அதை பிளப்பவரே! வலிமையானதும், பெரியதுமான யானையின் முகம் பெற்றவரே! சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவரே! பிரம்மன், இந்திரன் போன்ற தேவர்களால்
போற்றப்படுபவரே! கணேசர் என்னும் பெயர் பெற்ற மங்களமூர்த்தியே! செல்வ வளத்தைத் தருவீராக.
குறிப்பு: கணேச ஸ்தோத்திர ஸ்லோகம்
