
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேதாந்த வேத்ய பவஸாகர கர்ணதார
ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம!
லோகைக பாவன பராத்பர பாஹாரின்
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!
(வெங்கடேஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: வேதம், வேதாந்தத்தால் போற்றப்படுபவரே! பிறவிக்கடலில் இருந்து தப்பிக்க வைக்கும் கப்பலாக திகழ்பவரே! பத்மநாபரே! மகாலட்சுமியால் வணங்கப்படும் திருவடி கொண்டவரே! உலகை சுத்தமாக இருக்கச் செய்பவரே! தெய்வங்களுக்கு எல்லாம் மேலானவரே! பாவம் போக்குபவரே! வெங்கடேசரே! எனக்கு கைகொடுத்தருள வேண்டும்.