
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கதாஹம் காவேரீ விமலஸலிலே வீதகலுஷோ
பவேயம் தத்தீரே ஸ்ரமஜுஷி வஸேயம் கனவனே!
கதாவா தத்புண்யே மஹதிபுளினே மங்கள குணம்
பஜேயம் ரங்கேஸம் கமலநயனம் ஸேஷ ஸயனம்!!
பொருள்: புனிதமான காவிரி தீர்த்தத்தில் எப்போது நீராடி பாவம் அற்றவனாக ஆவேன்? அடர்ந்த தோப்புகொண்டதும், அழகு மிக்கதுமான காவிரிக்கரையில் வசிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? அழகு மிக்க காவிரி மணல் பரப்பில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பவரும், கல்யாண குணம் பெற்றவரும், செந்தாமரைக் கண் உடையவருமான ரங்கநாதரை சேவிக்கும் பாக்கியம் எப்போது கிடைக்கும்?
குறிப்பு: பராசர பட்டரின் ரங்கநாத ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்