மே 25, வைகாசி 11: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை.
மே 26, வைகாசி 12: தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், அகோபில மடம் 27வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
மே 27, வைகாசி 13: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை முத்துமாணிக்க சுவாமிகள் குருபூஜை.
மே 28, வைகாசி14: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
மே 29, வைகாசி 15: முகூர்த்த நாள், அக்னி நட்சத்திரம் காலை 7:43 மணிக்கு முடிவு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம், திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
மே 30, வைகாசி 16: ஏகாதசி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார சேவை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், கரிநாள்.
மே 31, வைகாசி 17: பிரதோஷம், மாலை 4:30 - 6:30க்குள் நந்தீஸ்வரர் அபிேஷகம், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தானம் எழுந்தருளல், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, கரிநாள்.

