ஜூன் 15, வைகாசி 32: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருஷப சேவை, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
ஜூன் 16, ஆனி 1: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சேஷ வாகனம், மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கு, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் முத்துப்பந்தல் அருளிய லீலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், கரிநாள்
ஜூன் 17, ஆனி 2: பவுர்ணமி விரதம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனம், அவினாசி அவினாசியப்பர் பவுர்ணமி அபிஷேகம், அறுபத்து மூவர் குருபூஜை
ஜூன் 18, ஆனி 3: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கணபதி உற்ஸவம் ஆரம்பம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர். மதுராந்தகம் கோதண்டராமர் வீதியுலா, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு,
ஜூன் 19, ஆனி 4: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் தேர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராடல், மதுராந்தகம் கோதண்டராமர் வீதியுலா, திருத்தங்கல் பெருமாள், தாயார் கண்ணாடி சப்பரத்தில் பவனி
ஜூன் 20, ஆனி 5: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனம், தாயார் பூப்பல்லக்கு, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் அபிஷேகம், அகோபில மடம் 13வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
ஜூன் 21, ஆனி 6: திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர், சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, கரிநாள்

