ஜூன் 29, ஆனி 14: கார்த்திகை விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சந்திரசேகரர் உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருப்பரங்குன்றம், விராலிமலை முருகன் புறப்பாடு,
ஜூன் 30, ஆனி 15: பிரதோஷம், சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் பவனி
ஜூலை1, ஆனி 16: மாத சிவராத்திரி விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் வீதியுலா, திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சோமப்பா சுவாமிகள் குருபூஜை
ஜூலை 2, ஆனி 17: அமாவாசை விரதம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் உற்ஸவம் ஆரம்பம், திருவள்ளூர் வீரராகவர் தெப்பம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை, ஏரல் அருணாசல சுவாமி திருவிழா
ஜூலை 3, ஆனி 18: ராமநாதபுரம் கோதண்டராமர் தோளுக்கினியானில் பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி, பத்ராசலம் ராமர் புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் பவனி,
ஜூலை 4, ஆனி 19: முகூர்த்தநாள், சந்திர தரிசனம், அமிர்த லட்சுமி விரதம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் பரங்கி நாற்காலியில் பவனி, ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ராமர் திருமஞ்சனம்
ஜூலை 5, ஆனி 20: ராமநாதபுரம் கோதண்டராமர் அனுமார் வாகனம், திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் சிவன் உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் ஆடும்பல்லக்கில் புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார்கோவில் சிவன் பவனி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை