டிச.6, கார்த்திகை 20: முகூர்த்த நாள், சுவாமிமலை முருகன் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளிமயில் வாகனத்தில் பவனி, பழநி முருகன் பவனி, திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி, இரவு சுவாமி வெள்ளித் தேர், அம்மன் இந்திர விமானம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்
டிச.7, கார்த்திகை 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர், திருப்பரங்குன்றம் முருகன் மயில்வாகனம், தேவகோட்டை ரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, சுவாமிமலை முருகன் யானை வாகனம்
டிச.8, கார்த்திகை 22: கைசிக ஏகாதசி, ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் கைசிக புராணப் படலம், திருவண்ணாமலை அண்ணாமலையார் வெள்ளி விமானம், பழநி முருகன் பவனி, திருப்போரூர் முருகன் அபிேஷகம், ஆராதனை விழா, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், அழகர்கோவில் கள்ளழகர் பவனி
டிச.9, கார்த்திகை 23: பிரதோஷம், சிவன் கோயில்களில் சங்காபிேஷகம், திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிேஷகம், பரணி தீபம், திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை கண்ணாடி விமானம், இரவு சுவாமி கைலாசம், அம்மன் காமதேனு வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி
டிச.10, கார்த்திகை 24: திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலை தீபம், கார்த்திகை விரதம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனம், குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலில் நாராயணசுவாமி பவனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர், அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
டிச.11, கார்த்திகை 25: முகூர்த்த நாள், வைகானஸ தீபம், பவுர்ணமி விரதம், தத்தாத்ரேயர் ஜெயந்தி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், திருவண்ணாமலை அண்ணாமலையார் தெப்பம், நத்தம் மாரியம்மன் லட்ச தீபக் காட்சி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி பவனி, அவிநாசி அவிநாசியப்பர் சிறப்பு அபிேஷகம், அறுபத்து மூவர் குருபூஜை
டிச.12, கார்த்திகை 26: பாஞ்சராத்ர தீபம், திருவண்ணாமலை அண்ணாமலையார், அபித குஜாம்பாள் கைலாசகிரி பிரதட்சணம், பராசக்தியம்மன் தெப்பம், திருப்பதி ஏழுமலையான்
புஷ்பாங்கி சேவை, சுவாமி மலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம்