
பிப்.21 - மகாசிவராத்திரி
பிப்.21, மாசி 9: முகூர்த்த நாள், மகாசிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம், தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழா, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி வெள்ளித்தேர், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம் கோயில்களில் சிவன் ரிஷப வாகனம், கடம்பூர் சண்முகநாதர் கோயிலில் பூக்குழி விழா.
பிப்.22, மாசி 10: ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி, காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர் கோயில்களில் சிவன் தேர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
பிப்.23, மாசி 11: அமாவாசை விரதம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி தங்க ரிஷபசேவை, காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர் கோயில்களில் திருக்கல்யாணம், திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் லட்சதீபம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை, வேதாரண்யம் சிவன் பவனி.
பிப்.24, மாசி 12: திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், காளஹஸ்தி, வேதாரண்யம் சிவன் பவனி, கோச்செங்கட்சோழ நாயனார் குருபூஜை.
பிப்.25, மாசி 13: சந்திர தரிசனம், கோவை கோனியம்மன், நத்தம் மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூர் கோயில்களில் சுவாமி கிரிவலம், வேதாரண்யம் சிவன் பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
பிப்.26, மாசி 14: முகூர்த்த நாள், கோவை கோனியம்மன் புலி வாகனம், திருநெல்வேலி பரமேஸ்வரி வருஷாபிேஷகம், நத்தம் மாரியம்மன், திருக்கோகர்ணம் சிவன் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.
பிப்.27, மாசி 15: சதுர்த்தி விரதம், கோவை கோனியம்மன் கிளி வாகனம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், ஸ்ரீரங்கம் பெருமாள், ஸ்ரீசைலம், வேதாரண்யம் சிவன் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, கரிநாள்.