
ஜன.29, தை 16: வனசங்கரி பூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, சென்னை சிங்கார வேலர் தெப்பம், திருநெல்வேலி நெல்லையப்பர் சவுந்திரசபா நடனம்
ஜன.30, தை 17: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், சென்னை சிங்கார வேலர், குற்றாலம் சிவன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்களில் தெப்பம், தேனி மாவட்டம் குச்சனுார் சனி பகவான் சிறப்பு ஆராதனை, திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம், கரிநாள்
ஜன.31: தை 18: சங்கடஹர சதுர்த்தி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு, வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமார சுவாமி உற்ஸவம் ஆரம்பம்
பிப்.1, தை 19: முகூர்த்த நாள், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், திருநெல்வேலி டவுன் லட்சுமி நரசிம்மர் புஷ்பாஞ்சலி சேவை, திருச்செந்துார் முருகன் பிரதிஷ்டா தினம், வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரசுவாமி பவனி, சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
பிப்.2, தை 20: திருவையாறு 17 தியாக பிரம்ம ஆராதனை விழா, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக் குமார சுவாமி பவனி, கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
பிப்.3, தை 21: முகூர்த்த நாள், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிேஷகம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம், வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரசுவாமி பவனி, அகோபில மடம் 15வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
பிப்.4, தை 22: முகூர்த்த நாள், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை