
ஜன. 13 மார்கழி 29: மதுரை செல்லத்தம்மன் உற்ஸவாரம்பம். சங்கரன் கோயில் கோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி முருகன் கிளி வாகனம்.
ஜன.14 மார்கழி 30: போகிப்பண்டிகை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சனம். குச்சனுார் சனிபகவான் சிறப்பு அபிஷேகம். இன்று கருட தரிசனம் செய்வது நன்று.
ஜன.15 தை 1: உத்திராயண புண்ணிய காலம். தைப்பொங்கல். (பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல்யானைக்கு கரும்பு கொடுத்த லீலை. கரிநாள்.
ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல், விரிஞ்சிபுரம் சங்கரரமணர்க்கு அபிேஷகம். காஞ்சி வரதராஜப்பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.கரிநாள்.
ஜன. 17 தை 3: சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தங்கப்பூமாலை சூடியருளல். நம்மாழ்வார் புறப்பாடு, திருநீலகண்ட நாயனார், தாயுமானவ சுவாமிகள் குருபூஜை.
ஜன.18 தை 4: முகூர்த்தம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் காலை மாலை பவனி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம். மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.
ஜன. 19 தை 5: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை, திருமொச்சியூர், சூரியனார்கோவில் இத்தலங்களில் உற்ஸவாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை.

