
ஜூலை 21 ஆடி 5: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் குதிரை வாகனத்தில் புறப்பாடு. படை வீடு ரேணுகாம்பாள், மதுரை மீனாட்சியம்மன் புறப்பாடு.
ஜூலை 22 ஆடி 6: ஆடிப்பூரம். ஆண்டாள் திருநட்சத்திரம். கன்னிபெண்கள் பூஜை, கன்னி மாவிளக்கு, ருதுமதி பூஜை, பூரம் தொழுதல், அஹோபில மடம் ஸ்ரீமத் 26 வது பட்டம்
அழகியசிங்கர் திருநட்சத்திரம் வைபவம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் காலை தங்க பல்லக்கு.
ஜூலை 23 ஆடி 7: சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா. நயினார் கோவில் சவுந்திரநாயகி தபசுக்காட்சி. இரவு திருக்கல்யாண வைபவம்.
ஜூலை 24 ஆடி 8: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் தீர்த்தவாரி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை சினேகவல்லியம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
ஜூலை 25 ஆடி 9: பெருமழலைக்குறும்ப நாயனார் குருபூஜை. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் அன்னவாகனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை சினேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்தரநாயகி தலங்களில் ஊஞ்சல் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூலை 26 ஆடி 10: அஹோபில மடம் ஸ்ரீமத் 25 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம் வைபவம். சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் குருபூஜை, பட்சிராஜர் திருநட்சத்திரம். மதுரை மீனாட்சியம்மன் புஷ்பப்பல்லக்கு. கரிநாள்.
ஜூலை 27 ஆடி 11: வாஸ்து நாள் (காலை 7:44 - 8:20) கிணறு, மனை, மடம், கோயிலில் வாஸ்து
செய்ய நன்று. அழகர்கோவிலில் அழகர் கஜேந்திர மோட்சம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

