
செப்.8 ஆவணி 22: திருச்செந்துார் முருகப்பெருமான் காலை வெள்ளி யானை வாகனம். இரவு தங்கமயில் வாகனத்திலும் பவனி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடு.
செப்.9 ஆவணி 23: பிள்ளையார்பட்டி, தேரெழுந்துார், திண்டுக்கல், உப்பூர், தேவகோட்டை, மிலட்டூர் இத்தலங்களில் விநாயகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஊஞ்சலில் மோகினி அலங்காரம். இரவு ராமாவதாரம் சிறிய திருவடிகளில் பவனி.
செப்.10 ஆவணி 24: முகூர்த்த நாள். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.
செப்.11 ஆவணி 25: முகூர்த்த நாள். செறுத்துணை நாயனார் குருபூஜை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். இன்று தென்னை,பலா, மா, புளி வைக்க நன்று.
செப்.12 ஆவணி 26: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை. பெருவயல் முருகப்பெருமான் பவனி.
செப்.13 ஆவணி 27: முகூர்த்த நாள். இளையான்குடி மாற நாயனார் குருபூஜை. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரிஷப வாகனத்தில் பவனி.
செப்.14 ஆவணி 28: அமாவாசை. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்து அருளல். கரிநாள்.