sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்

/

கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்

கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்

கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்


ADDED : அக் 21, 2014 12:34 PM

Google News

ADDED : அக் 21, 2014 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார். கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார். அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது மட்டுமல்ல! தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார். இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. நடந்தே செல்ல திட்டமிட்டார். அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார். எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார். அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.

அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார். பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர். செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார். அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர். அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன. ஆனால், மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால், பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது. அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார். அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார். செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.

அவரிடம் பக்தர்கள்,''இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,'' என கோரிக்கை வைத்தனர். மகாபெரியவர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார். பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர். அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார். பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.

ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நாமும் மகாபெரியவர் ஆசியுடன், அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.






      Dinamalar
      Follow us