sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

துறவின் உருவம்

/

துறவின் உருவம்

துறவின் உருவம்

துறவின் உருவம்


ADDED : டிச 30, 2021 12:57 PM

Google News

ADDED : டிச 30, 2021 12:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்கிறார் திருவள்ளுவர்.

'நான்', 'எனது' என்னும் உலக பற்றுகளை விட்டொழிக்க பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளின் திருவடிகளை பற்ற வேண்டும். அப்படி செய்ய இயலுமா என்ற எண்ணம் இருந்தால் காஞ்சி மஹாபெரியவரை சிந்தித்தால் நம் சந்தேகம் மறைந்து விடும். ஏனெனில் துறவின் உருவமாகவே வாழ்ந்தவர் அவர்.

நான், எனது, உற்றார், உறவினர் என்ற பாகுபாடு இல்லாமல் அதற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். தன் பூர்வாசிரம உறவுகளான தாய், தந்தை, சகோதரர் யாருக்கும் அவரிடம் உரிமையோ, சலுகையோ இருந்ததில்லை. மற்ற பக்தர்களைப் போல அவர்கள் சமநிலையில் நடத்தப்பட்டனர்.

தாமரை இலை தண்ணீர் போல முற்றும் துறந்தவராக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அது எப்போது தெரியுமா? பெற்ற தெய்வமான தாயாரின் மறைந்த நாள் அன்று தான்.

1932ல் சித்துார் மாவட்டம் நகரியில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்த போது ஒருநாள் ஸ்ரீமடத்தின் மேலாளருக்கு தந்தி வந்தது. பெரியவரின் தாயார் மகாலட்சுமி அம்மையார் சிவபதம் அடைந்ததாக தகவல் இருந்தது. அப்போது பெரியவர் பண்டிதர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மடத்தின் நிர்வாகி தந்தியுடன் வருவதைக் கண்டதும், ''தந்தி கும்பகோணத்தில் இருந்து வந்துள்ளதா?'' என பெரியவர் கேட்க 'ஆமாம்' என்றார் நிர்வாகி. அவரிடம் விபரம் ஏதும் கேட்கவில்லை. சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு பண்டிதர்களிடம் ''தாயாரின் மறைவைக் கேட்டதும் சந்நியாசி என்ன செய்ய வேண்டும்?'' எனக் கேட்டார். வருந்திய பண்டிதர்கள் அமைதியாக நின்றனர். உடனடியாக மஹாபெரியவர் அங்கிருந்து மூன்று கி.மீ., துாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்தார். பக்தர்களும் பகவானின் திருநாமங்களை ஜபித்தபடி பின்னால் நடந்தனர். பெரியவரைத் தவிர மற்றவர்கள் உணர்ச்சி மிகுந்தவர்களாகக் காணப்பட்டனர். நீர்வீழ்ச்சியில் பெரியவர் நீராடிய பின்னர் பக்தர்கள் நீராடினர். தாயின் மறைவைக் கேட்ட துறவி என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பதில் உடனே தலைமுழுக வேண்டும் என்பது மட்டுமே. இதே போல மஹாபெரியவரின் வாழ்வில் மற்றொரு சம்பவம் நடந்தது.

பள்ளி பருவத்தில் சுவாமிநாதன் (மஹாபெரியவர்) பெற்றோருடன் திண்டிவனத்தில் வாழ்ந்த காலம் அது.

அவரது அண்ணன் கணபதி சாஸ்திரிகள் சிதம்பரத்தில் படித்து வந்தார். ஒருமுறை விடுமுறைக்கு பெற்றோரைக் காண திண்டிவனம் வந்திருந்தார். பாட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக சுவாமிநாதன் (மஹாபெரியவர்) இருந்தார். தினமும் வகுப்பு முடிந்ததும் மாலையில் நண்பர்களுடன் விளையாடுவார்.

அப்படி ஒருநாள் விளையாடி விட்டு தாமதமாக வந்த போது மாலைநேரக் கடனான சந்தியாவந்தனம் செய்யத் தவறி விட்டாயே என கோபித்தார் அண்ணன். விளையாட்டில் ஈடுபட்டாலும் சரியான நேரத்தில் மைதானத்தின் அருகிலுள்ள நீரோடையில் சந்தியா வந்தனம் செய்து முடித்ததாக தெரிவித்தார். தம்பியின் கடமை உணர்வை அறிந்து பெருமை கொண்டதோடு மன்னிப்பும் கேட்டார். சுவாமிநாதன் துறவியான பிறகு சீடராக இருந்து கைங்கர்யம் செய்தார் கணபதி சாஸ்திரிகள்.

அவர் இறந்த போது தன் சீடரான ரா.கணபதியிடம் இந்த சம்பவத்தை மஹாபெரியவர் தெரிவித்தார்.

''சகோதரராக பார்க்காமல் அவரை ஒரு நல்ல மனிதராக, பண்பாளராகவே மஹாபெரியவர் கருதினார்'' என்கிறார் ரா.கணபதி.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்

எஸ்.கணேச சர்மா






      Dinamalar
      Follow us