தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அழகெல்லாம் முருகனே...

அழகெல்லாம் முருகனே...

அழகெல்லாம் முருகனே...


ADDED : நவ 13, 2026 08:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 08:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகனான முருகப்பெருமானை பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதை கேட்போமா...

'உன் மனசுல மன்மதன்னு நினைப்போ?' என அழகானவர்களை கேலி செய்வது உண்டு. ஆனால் காமத்தை உண்டாக்கும் மன்மதன் எப்படி தோன்றினான் தெரியுமா?

மகாவிஷ்ணுவின் மனதில் இருந்தே தோன்றினான். நம் மனதில் இருந்து தானே காம எண்ணம் வருகிறது. அந்த அழகன் மன்மதனையும் விட பல கோடி மடங்கு அழகன்

ஒருவன் இருக்கிறான். அவனே முருகப்பெருமான்.

அவனுடைய பேரழகை, 'மநஸிஜ கோடி கோடி லாவண்யாய..' என்பார்கள்.

சிவபெருமான் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பல் ஆக்கினார். மன்மதனை எரித்த பின் அவனுடைய கரும்பு வில், மலர்(பூ) அம்பினை ஏற்ற பார்வதி 'காமேஸ்வரி'ஆனாள். அதன் பின்னரே முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் அவதரித்தார்.

அதாவது மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணில் கிளம்பிய ஞானத்தீயில் இருந்து முருகன் தோன்றினார். 'முருகு' என அவரை நாம் அழைக்கிறோம். 'முருகு' என்றால் 'அழகு'.

முருகப்பெருமானின் தாயான பார்வதிக்கு 'திரிபுர சுந்தரி' என்றும் பெயருண்டு. அழகே வடிவான அவளின் மகன் எப்படி இருப்பான்? 'தாயைப் போலே பிள்ளை' என்று தானே சொல்வார்கள்.

அழகு இருந்தால் போதுமா... நமக்கு வேண்டியது அருள் அல்லவா... முருகப்பெருமானின் அழகே அருள்தானே! அழகு, அருளுடன் எதிரிகளை அழிக்கும் வீரமும் கொண்டவர் அவர். நம் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் கருணைக்கடலாகவும் இருக்கிறார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.

* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.

* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us