sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 20

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 20

பகவத்கீதையும் திருக்குறளும் - 20

பகவத்கீதையும் திருக்குறளும் - 20


ADDED : செப் 27, 2024 12:50 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யார் துறவி

விடுமுறை என்பதால் நேரம் போவது தெரியாமல் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான் கந்தன். அப்போது ராமசாமி தாத்தாவை பற்றியும் பேச்சு வந்தது. நம்ம ஊரும், பக்கத்து ஊரும் இன்னிக்கு ஒற்றுமையா இருக்கோம்ன்னா அவரால தான்...'' என்றாள் அம்மா. இதைச் சொன்னதும், ' தாத்தாவிடமே இதை தெரிஞ்சுக்கிறேன்' என்று சொல்லி விட்டு ஓடினான். 'சாதனை எல்லாம் பண்ணி இருக்கீங்களே தாத்தா! பக்கத்து ஊருக்காரங்க நம்மோடு சேர நீங்கதான் காரணமாமே... என அம்மா சொன்னாங்க'' என்றான். ''அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. மூணு வருஷத்துக்கு முன்னால ஒருநாள் என் நண்பனை பார்க்க வெளியூருக்கு போயிருந்தேன். அந்த நேரத்துல மழை பெய்து கண்மாயில் கரை உடைஞ்சு போய் பக்கத்து ஊரு வயல்ல எல்லாம் தண்ணி வந்துடுச்சு. நம்ம ஊருக்காரங்க தான் உடைச்சாங்கன்னு நினைச்சு சண்டைக்கு வந்தாங்க. எவ்வளவோ சொல்லியும் கேட்கல. பெரும்பகையா ஆயிடுச்சு. ஊர்ல இருந்து வந்ததும் விஷயம் என் காதுக்கு வந்துச்சு. உடனே பக்கத்து ஊரு நாட்டாமையை பார்க்க போனேன். எதுக்கு வந்தீங்கன்னு கோபமாக கேட்டாரு.

''கண்மாய் கரையை நாங்க உடைக்கல. ஏற்கனவே அது சேதமாகித் தான் இருந்துச்சு. மழை பெய்து தண்ணி அதிகமாகவும் கரை உடைஞ்சு போச்சு. நாங்க காரணமில்லை'' என்றேன்.

மேலும் அவரிடம், ''எங்களோட சண்டையிட்டதால உங்க நஷ்டம் சரியாயிடுச்சா... இல்லையே அறுவடைக்கு தயாராக இருந்த நெல் எல்லாம் வீணாப் போனதுதான் மிச்சம். உங்களுக்கு உதவி செய்யத் தான் வந்திருக்கேன். எங்க ஊரில பணம் வசூலிச்சு கொண்டு வந்திருக்கேன். இந்த பணத்தில வயலை சீர்படுத்துற வேலையை ஆரம்பிங்கன்னு சொன்னேன். நாட்டாமை கண் கலங்கி போனார். அந்த ஊர்க்காரங்களும் சமாதானம் ஆயிட்டாங்க'' என்றார் தாத்தா. மேலும் அவனிடம், பகவத்கீதையின் 5ம் அத்தியாயம் 4ம் ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர் இது பற்றி சொல்லியுள்ளார்.

ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்³வேஷ்டி ந காங்க்ஷதி|

நிர்த்³வந்த்³வோ ஹி மஹாபா³ஹோ ஸுக²ம் ப³ந்தா4த்ப்ரமுச்யதே ||5-4

வீரமான தோள்களை கொண்ட அர்ஜூனனே... யார் மீதும் பகை, விருப்பம் இல்லாதவரே சிறந்த துறவி. நல்வினை, தீவினைகளில் இருந்து விலகிய அவர் எளிதில் பாச பந்தங்களில் இருந்து விடுபடுவார்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

துறவுக்குரிய தகுதிகளைப் பெற்று, உண்மையை உணர்ந்து பின்பற்றுபவர் இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள்.

விருப்பு, வெறுப்பு இன்றி வாழ்வதுதான் துறவிக்கு முதல் தகுதி என்கிறார் பகவான் கிருஷ்ணர். இதே கருத்தை 344வது குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்துகிறார் என்றார் தாத்தா.

'விருப்பு, வெறுப்பு இல்லாமல் துறவியை போல நீங்க இருந்ததால இரண்டு ஊரும் ஒற்றுமையா இருக்கு'' என்றான் கந்தன்.

-தொடரும்

எல்.ராதிகா

97894 50554






      Dinamalar
      Follow us