
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தான். அசுரர்கள் கலசத்தை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் கலசத்தில் இருந்த அமிர்தத் துளிகள் கீழே சிந்தின. நெல்லி மரங்கள் சூழ்ந்த இங்கு அமிர்தம் விழுந்ததால் அதில் இருந்து சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் மூன்றும் தோன்றின. பழையாறை என்னும் இந்த தலத்தில் வழிபாடு செய்து பயணத்தை தொடர்ந்தார் கருடன்.
சுயம்பு லிங்கமான சிவபெருமானை 'சோமநாதர்' என்றும், அம்மனை 'சோம கலாம்பிகை' என்றும் அழைக்கின்றனர். ராஜராஜச்சோழன் திருப்பணி செய்த கோயில் இது. இங்கு தான் அமர்நீதி நாயனார் அவதரித்தார். பட்டீஸ்வரத்திற்கு அருகே 2 கி.மீ., துாரத்தில் இத்தலம் உள்ளது.