தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கர்வமுடன் கொடுக்காதே

கர்வமுடன் கொடுக்காதே

கர்வமுடன் கொடுக்காதே


ADDED : ஜன 22, 2026 12:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாண்டவரில் ஒருவரான பீமன், முனிவர்களுக்கு அன்னதானம் செய்தான். அதற்காக அவர்களை வற்புறுத்தி அதிகம் சாப்பிட வைத்தான். மறுப்பவர்களை திட்டி அவமானப்படுத்தினான். இதன் காரணமாக சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. ஒருமுறை கிருஷ்ணர் இது பற்றி பீமனிடம் விசாரித்தார்.

''கிருஷ்ணா! முந்நுாறு, நானுாறு என வந்தவர்கள் முப்பது, நாற்பதாக குறைந்து விட்டனரே'' என வருந்தினான்.

''சரி... அன்னதானத்தை நான் கவனிக்கிறேன். பக்கத்து மலையில் கந்தமாதன மகரிஷி என்பவர் நீண்டகாலம் தவமிருந்து வருகிறார். அவரைச் சந்தித்தால் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

பீமனும் அவரைச் சந்திக்கப் போனான்.

மகரிஷியின் உடம்பே பொன் போல ஜொலித்தது. ஆனால் வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றம் வீசியது.

“ மகரிஷியே! ஏன் இந்த கொடுமை உங்களுக்கு?” எனக் கேட்டான் பீமன்.

“பீமா! நான் முற்பிறவியில் அன்னதானம் செய்தேன். அந்த புண்ணியத்தால் இந்த பொன்னுடல் கிடைத்தது. ஆனால் சாப்பிட வருவோரை வற்புறுத்தி அதிகம் சாப்பிட வைத்தேன். மறுப்பவர்களை கர்வத்துடன் திட்டவும் செய்தேன். இதனால் இக்கொடுமைக்கு ஆளானேன். பகவான் கிருஷ்ணரால் அனுப்பப்பட்ட உன்னைக்கண்டதால் இனி பிரச்னை தீரும்'' எனத் தெரிவித்தார்.

மனம் திருந்திய பீமன், ''கிருஷ்ணா! இன்று முதல் தானம் அளிக்கும் போது கர்வம் சிறிதுமின்றி இனிமையுடன் பேசுவேன்'' என தெரிவித்தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us