
படிப்பில் அக்கறை இல்லாத ராமலிங்கம் மீது அவருடைய அண்ணன் சபாபதிக்கு கோபம் உண்டானது. அதனால், மனைவியிடம், “படிக்க எண்ணம் இல்லாத ராமலிங்கத்திற்கு உணவு கொடுக்காதே” என கட்டளையிட்டிருந்தார்.
அன்று இரவு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்ற ராமலிங்கம், இரவு வீட்டுக்கு வர நீண்ட நேரமானது. வீட்டுக்கு வந்த போது கதவு தாழிட்டிருந்தது.
வெளியிலுள்ள திண்ணையில் ராமலிங்கம் படுத்தார். பசியாக இருந்ததால் துாக்கம் வரவில்லை. அப்போது ராமலிங்கத்தின் அண்ணியார் கோலத்தில் வடிவுடையம்மனே வந்து அன்னமிட்டு மறைந்தாள்.
பசியாறிய ராமலிங்கம் நிம்மதியாக படுத்தார்.
நள்ளிரவில் விழித்த அண்ணியார் திண்ணையில் துாங்கும் ராமலிங்கத்தை எழுப்பி சாப்பிட வரும்படி கூறினாள்.
அப்போது ராமலிங்கம், “கோயிலில் இருந்து வந்ததும் நீங்கள் தானே உணவு கொடுத்தீர்கள். நான் சாப்பிட்ட இலை கூட அங்கு கிடப்பதைப் பாருங்கள்” என்றார்.
அதன் பின்னரே திருவொற்றியூர் வடிவுடையம்மனே உணவிட்ட உண்மை புரிந்தது.

