தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சத்தியம் தவறாதவர்

சத்தியம் தவறாதவர்

சத்தியம் தவறாதவர்


ADDED : ஜூன் 11, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 11:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கங்காதேவியின் மகனான பீஷ்மர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த திருமண சுயம்வரத்தில் பங்கேற்றார். காசிராஜனுக்கு அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடிக்க வலுக்கட்டாயமாக தேரில் ஏற்றிச் சென்றார் பீஷ்மர்.

அவர்களில் அம்பை சாளுவ தேசத்து மன்னரான பிரம்மதத்தனை விரும்புவதாகவும், தன்னை அங்கே அனுப்பும்படியும் வேண்டினாள். பீஷ்மரும் சம்மதித்தார். ஆனால் மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை ஏற்க மறுத்தான் பிரம்மதத்தன். வேறுவழியின்றி அம்பை தன்னை மணக்குமாறு பீஷ்மரிடம் வேண்டினாள். அவரோ தன் தந்தையின் நலன் கருதி திருமணமே செய்ய மாட்டேன் என சத்தியம் செய்திருப்பவர். எனவே திருமணம் செய்ய மறுத்தார். அவள் பீஷ்மரின் குருநாதரான பரசுராமரின் உதவியை நாடிச் சென்றாள். அவளை திருமணம் செய்யுமாறு பீஷ்மரைக் கேட்டுக் கொண்டார் பரசுராமர். அதையும் மறுத்தார் பீஷ்மர்.

கோபம் கொண்ட பரசுராமர் சீடனுடன் போருக்குச் சென்றார். பீஷ்மரோ குருவையே தோற்கடித்தார். பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து பரசுராமர் வியந்தார். குருவே சொன்னாலும் சத்தியத்தில் இருந்து தவறக் கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சி உதாரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us