ADDED : ஜூன் 05, 2025 09:34 AM

நடனக் கலை அருளும் நிருத்த கணபதி
நடனம் என்பது தத்துவ ரீதியாக இயக்க நிலையைக் குறிக்கும். இறைவன் இயக்கினால் தான் உயிர்களும் உலகங்களும் இயங்கும் என்பதைக் குறியீடாகக் காட்டவே, அவ்விறைவனை நடனக் கோலத்தில் காட்டுவது மரபு. அந்த வகையில் கணபதியும் நடனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
தியான சுலோகம்
பாசாங் குசாபூப குடார த'ந்த சஞ்சத்கரா க்லுப்த வராங்குலீயகம்|
பீதப்ரபம் கல்ப தரோ ரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேசம் ||
பாச - பாசம் எனும் ஆயுதத்தையும்
அங்குச் - அங்குசம் எனும் ஆயுதத்தையும்
அபூப - அப்பம் (அதிரசம்) எனும் உணவுப் பண்டத்தையும்
குடார -மழு எனும் ஆயுதத்தையும்
தந்த - தனது உடைந்த தந்தத்தையும் (கொண்டிருப்பவரும்)
சஞ்சத் கரா க்லுப்த - அபிநயிப்பதற்காக அசைந்து ஆடுகின்ற கையினில் அணியப்பட்ட
வர - சிறந்த
அங்குலீயகம் - (விரல்களில்) மோதிரங்களை உடையவரும்
பீதப்ரபம் - மஞ்சள் நிறத்தவரும்
கல்பதரோ: - கற்பக மரத்தின்
அதஸ்தம் - கீழே இருப்பவரும்
நிருத்தோப பதம் - ஒரு காலை ஊன்றி மற்றொரு காலைத் துாக்கி உயர்த்திய நடன பாதத்தை உடையவருமான
கணேசம் - (நடனமிடும்) விநாயகப் பெருமானை
பஜாமி - வணங்குகிறேன்
பாசம், அங்குசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்
அப்பம்: இனிப்பு; வீடுபேறான முக்தியைக் குறிக்கிறது
மழு: தந்தை சிவபெருமானின் ஆயுதம்.
உயிர்களைப் பிணைத்துள்ள பாசங்களை வெட்டி, வீடுபேற்றைத் தருவது.
ஒடித்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.
கற்பசு மரம்: அடியவர்கள் வேண்டுவதை வேண்டியபடியே அருளும் கருணை உள்ளம் கொண்டவர் விநாயகர் என்பதை இம்மரம் காட்டுகிறது
பலன் : பக்தர்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும். நாட்டியக்கலை ஞானம் கைகூடும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்