sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வேண்டாம் வதந்தி

/

வேண்டாம் வதந்தி

வேண்டாம் வதந்தி

வேண்டாம் வதந்தி


ADDED : மே 17, 2024 07:50 AM

Google News

ADDED : மே 17, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முனிவர் ஒருவர் கண்களை மூடியபடியே யாசகம் பெறுவார். பழம், கிழங்குகளை கொடுத்தால் சாப்பிடுவார். ஒருநாள் அந்நாட்டு மன்னர் அவ்வழியாக குதிரை மீது சென்றார். முனிவரைக் கண்டு கேலி செய்யும் விதமாக குதிரையின் சாணத்தை கையில் வைக்க, முனிவரும் அதை உண்டார். அதைப் பார்த்து மன்னர் இறுமாப்புடன் நகர்ந்தார். மன்னரின் குலகுரு ஞானதிருஷ்டியில் நடந்ததை அறிந்தார். “காட்டிலுள்ள முனிவருக்கு குதிரையின் சாணம் கொடுத்தீரா?' எனக் கேட்க மன்னரும் சிரித்தார்.

''மன்னா... நீர் கொடுத்த சாணம், நரகத்தில் மலை போல் வளர்ந்து விடும். அங்கு உனக்கு சாணமே உணவாக கொடுக்கப்படும். பாவம் தீரும் வரை தர்மம் செய்'' என்றார் குலகுரு.

அதன்படி நந்தவனத்தில் குடில் அமைத்து தங்கினார் மன்னர். அங்கு பெண்களை வரவழைத்து அன்பளிப்பு கொடுப்பதோடு கணவரின் வீட்டில் எப்படி நடக்க வேண்டும் என அறிவுரையும் கூறி வந்தார். ஆனால் எதிரிகள் சிலர் இதை வேறுமாதிரி கதை கட்டினர். 'பெண்களை தவறான நோக்கில் வரவழைக்கும் மன்னர், பாவத்திற்கு பரிகாரமாக அன்பளிப்பு கொடுத்தனுப்புகிறார்'' என வதந்தியைப் பரப்பினர்.

பார்வைக் குறைபாடு உள்ள கணவருடன் நந்தவனத்திற்கு பிச்சை கேட்டு வந்தாள் ஒருபெண். “இப்போது நாம் எங்கு இருக்கிறோம்'' எனக் கேட்டார் கணவர். 'மன்னரின் நந்தவனத்தின் முன்பு” என்றாள் அவள். ''ஓ... தானம் அளிப்பதாகச் சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறாரே அவரிடமா?” எனக் கேட்டார். கணவரின் வாயை பொத்தியபடி,

“அன்பரே! கற்பின் சக்தியால் முக்காலமும் அறிந்தவள் நான் என தெரியாதா... முனிவர் ஒருவருக்கு விளையாட்டாக குதிரை சாணத்தை உணவாக கொடுத்தார் மன்னர். அந்த சாணம் நரகத்தில் மலையாக வளரத் தொடங்கியது. குலகுருவின் மூலம் விஷயத்தை அறிந்த மன்னர் தானம் செய்ய தொடங்கினார். இதன்பின் வீண் வதந்தி பரப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாவக்கணக்கில் ஒரு கவளம் சாணம் பங்கிடப்பட்டது. அதில் கடைசி கவளம் மட்டும் இருந்தது. மன்னரைப் பற்றி தவறுதலாக பேசி உங்கள் பாவக்கணக்கில் சேர்த்துக் கொண்டீரே” என கணவரிடம் சொன்னாள் அவள்.

வதந்தியை பரப்பினால் தண்டனை நிச்சயம்.






      Dinamalar
      Follow us