
மருத்தன் என்னும் மன்னன் யாகம் ஒன்றை நடத்தி தரும்படி தேவகுருவை வேண்டினான்.
அவர் மறுக்கவே தேவகுருவின் தம்பியான சம்வர்த்தர் மூலம் யாகம் நடத்தினான். சம்வர்த்தரை தேவகுருவுக்குப் பிடிக்காது. தன்னைப் போல் அறிவுள்ளவனாக தம்பி இருக்கிறானே என பொறாமைப்பட்டார். அக்னியை அழைத்து தம்பி நடத்தும் யாகத்தை தடுக்கச் சொன்னார். அக்னி ஏற்க மறுத்தான். இருந்தாலும் குருவின் மிரட்டலுக்கு பயந்து யாக குண்டத்தில் அளவுக்கதிகமாக கொழுந்து விட்டு எரிந்தான்.
தம்பி கலங்கவில்லை.
தன் தவவலிமையால் அக்னியை எரிக்க ஆரம்பிக்க அவன் பயந்தோடினான். இதன் பின் இந்திரனை வஜ்ராயுதத்துடன் அனுப்பினார் குரு. அவனையும் விரட்டியடித்தார் தம்பி. பின்னர் வருந்திய தேவகுரு, இந்நாடகத்தை நிகழ்த்தியதன் மூலம் மக்கள் சகோதரர் ஒற்றுமையை
பேண வேண்டும் என தெரிவித்தார். ஒருவரின் ஜாதகத்தில் சகோதர பாவத்தைக் குறிக்கும் கிரகமான செவ்வாய் மீது தேவகுருவின் பார்வை பட்டால் சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர்.