
கோபுரத்தில் இருந்த பல்லிகளுக்கு இடையே 'யார் முதலில் உச்சிக்கு செல்வது' என போட்டி நடந்தது. வேகமாக சென்ற பல்லியில் ஒன்று கீழே விழ, அதை பார்த்த அதன் நண்பர்கள் இருவர் 'நம்மால் முடியாது' என விலகி கொண்டது. மற்றவை உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தன. கீழே இருந்த மூன்று பல்லிகளும், ''நண்பர்களே... உச்சிக்கு செல்லாதீர்கள். கீழே விழுந்தால் உயிர் போய்விடும்'' என்று கத்தின. இதைக் கேட்டதும் ஒரு பல்லியை தவிர மற்றவை பயத்தில் கீழே வரத்தொடங்கின. இறுதியில் அந்த பல்லி வெற்றி பெற்றது.
அந்த பல்லியை மற்ற பல்லிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தன. 'எப்படி இவனால் மட்டும் வெற்றி பெற முடிந்தது' என அதன் அம்மாவிடம் கேட்டனர். 'அவனுக்கு காது கேட்காது' என்று அது பதிலளித்தது.
பார்த்தீர்களா.. நாமும் இப்படித்தான்.. புதிய முயற்சிகளில் இறங்கியிருப்போம். இதை பார்க்கும் சிலர், 'உன்னால் அதை செய்ய முடியாது. ரொம்ப கஷ்டம்' என்று சொன்னால் போதும், உடனே மனம் மாறி விடுவோம். வெற்றியடைய தகுதியிருந்தும் பிறர் கூறுவதை கேட்டால் சாதிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் உங்களின் முயற்சியை கைவிடாதீர்கள்.