sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனசுக்குள் இருப்பதை....

/

மனசுக்குள் இருப்பதை....

மனசுக்குள் இருப்பதை....

மனசுக்குள் இருப்பதை....


ADDED : ஜூன் 20, 2016 10:51 AM

Google News

ADDED : ஜூன் 20, 2016 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1932 செப்டம்பரில் காஞ்சிப்பெரியவர் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கலாசாலைக்கு விஜயம் செய்தார். பெரியவர் நடத்தும் பூஜையைத் தரிசிக்க மயிலாப்பூரில் உள்ள பிரபல டாக்டர் வந்தார். அவருக்கு சுவாமிகள் தன் இல்லத்திற்கு வர மாட்டாரா என்ற ஆவல் மனதிற்குள் இருந்தது.

சுவாமிகள் ஒருநாள் மருத்துவரிடம், “உங்க வீடு எங்கிருக்கு?” என்று கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத மருத்துவர் மகிழ்ச்சியுடன் வீடு இருக்கும் இடத்தை தெரிவித்தார்.

அவரிடம் பெரியவர், “இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் வீட்டில் இருப்பேன். குடும்பத்தாருடன் வீட்டில் இருங்கள்” என்றார். குறைந்த நேரத்திற்குள் வரவேற்பு ஏற்பாட்டை எப்படி செய்வது என்ற பரபரப்பு டாக்டருக்கு ஏற்பட்டது.

அதைப் புரிந்து கொண்ட பெரியவர், “உங்கள் வீட்டிற்கு வரும் ஏற்பாடுகளை மடத்து ஊழியர்கள் மூலம் நானே செய்து கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக

இருக்கலாம்” என்ற பெரியவர், அவரது வீட்டிற்கு சென்று, குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார்.

நிஜ பக்தர்களின் மனதில் உள்ளதைக் கூட அறிந்து கொள்ளும் மகானுபாவராக விளங்கினார் மகாசுவாமி.

நீலக்கல் சி.என்.முத்துஸ்வாமி சாஸ்திரி






      Dinamalar
      Follow us