sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 8

/

பகவத்கீதையும் திருக்குறளும் - 8

பகவத்கீதையும் திருக்குறளும் - 8

பகவத்கீதையும் திருக்குறளும் - 8


ADDED : ஜூலை 03, 2024 01:24 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசையே காரணம்

வீட்டில் இருந்த ராமசாமி தாத்தாவை பார்க்க வந்தான் கந்தன். ''என்னடா ரெண்டு மூணு நாளா பார்க்க முடியலையே'' எனக் கேட்டார் தாத்தா. அவன் கவலையுடன், ''எங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. இன்னிக்கு தான் ஊருக்கு கிளம்பி போனாங்க. அதான் பார்க்க வரலை'' என்றான்.

''அதுக்கு ஏன்டா கவலைப்படுறே'' எனக் கேட்டார்.

''எனக்கு கரடி பொம்மை ரொம்ப பிடிக்கும். பெருமாள் கோயில் திருவிழாவின் போது வாங்கினது. ஆனா எங்க சொந்தக்காரங்க குட்டி பாப்பாவை கூட்டிட்டு வந்தாங்க. அதுகிட்ட அந்த கரடி பொம்மையை அம்மா கொடுத்துட்டாங்க. அதான் கவலையில இருக்கேன்'' என்றான்.

''சரி... அந்த பொம்மை உனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீ பத்தாவது படிக்கும் போதும் அந்த பொம்மை உனக்கு பிடிக்குமா''

''பிடிக்கும்... ஆனா அதை வெச்சு விளையாட மாட்டேன்''

''நீ காலேஜ் படிக்கிற போது அந்த பொம்மையை என்ன பண்ணுவ?''

''துாக்கி போட்டுருவேன்'' என்றான்.

''பார்த்தாயா... இப்பத்தானே சொன்னே அந்த பொம்மை ரொம்ப பிடிக்கும்னு. ஆனா பெரியவன் ஆகும் போது அந்த பொம்மை உனக்கு சாதாரணமா தான் தெரியும். அப்போ வயதிற்கு ஏற்ப எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் இல்லையா? அப்போ இதை நினைச்சு ஏன் கவலைப்படுற? இதையே பகவத்கீதையின் 2 ம் அத்தியாயம்

49ம் ஸ்லோகத்தில்

துா³ரேண ஹ்யவரம்' கர்ம பு ³த்³தி4யோகா ³த் ³த4னஞ்ஜய ।

பு ³த்³தௌ4 ஶரணமன்விச்ச ² க்ரு' பணா: ப ²லஹேதவ: ॥

ஒரு பொருளின் மீது அதிக ஆசை வைப்பது கூடாது. சுயநலமாக வாழ்பவர் கெட்டவர் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

இதே பொருளில் திருவள்ளுவர் 363வது திருக்குறளில்

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில்

எந்த பொருளையும் விரும்பாமல் இருப்பதே சிறந்த செல்வம். இதைப் போல

உயர்ந்தது பூமியில் வேறில்லை என்கிறார். எந்த பொருள் மீதும் ஆசைப்படாமல் இருப்பதே உனக்கு நல்லது என கந்தனிடம் சொல்ல அவனும் அமைதியானான்.

-தொடரும்

எல்.ராதிகா

97894 50554






      Dinamalar
      Follow us