sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனதைக் கட்டுப்படுத்துங்க!

/

மனதைக் கட்டுப்படுத்துங்க!

மனதைக் கட்டுப்படுத்துங்க!

மனதைக் கட்டுப்படுத்துங்க!


ADDED : அக் 23, 2010 01:17 AM

Google News

ADDED : அக் 23, 2010 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், அதில்  முழுமையான கவனம் வேண்டும். 'ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போதே, வெளியில் என்னவெல்லாம் கெட்டது நடக்கிறது, அதைக் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போமே!' என்ற எண்ணம் தலைதூக்குவது இயல்பு. இது கூடாது என்கிறது ஆன்மிகம்.

துறவி ஒருவர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு மனிதரின் கால் வெட்டப்பட்டு கிடந்தது. அதில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. யாரோ ஒருவரின் காலை மிருகங்கள் பதம் பார்த்து விட்டதோ என அவர் சிந்தித்த வேளையில், காலை இழந்த மற்றொரு துறவி சற்று தூரத்தில் <உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.

 ''ஐயோ! உங்கள் காலை மிருகம் ஏதேனும்

கவ்வி விட்டதா?'' என்று பரிதாபத்துடன் விசாரித்தார் முதல் துறவி.

''ஆம்!'' என்றவரிடம், ''சிங்கமா, புலியா?'' என்று கேட்டார் முதல்துறவி.

''இரண்டும் இல்லை, மனம் என்னும் விலங்கு,'' என்ற காலிழந்த துறவியைக் கேள்விக்குறியுடன் நோக்கினார் முதல் துறவி.

''ஆம் துறவியே! நான் இங்கே தவத்தில் ஈடுபட்டிருந்தேன். கடும் தவம்...நேற்று, தற்செயலாகக் கண் திறந்த போது, என் எதிரே ஒரு பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் அப்சரஸ் போலக் காணப்பட்டாள். செடிகளின் மறைவில் நின்ற அவளை எனக்கு

சரியாகத் தெரியவில்லை. ஆசை காரணமாக, நான் அவளை எட்டி எட்டி பார்த்தேன். திடீரென என் மனசாட்சி பேசியது.

''தபஸ்வியான உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? போ! உன் காலை வெட்டிக் கொள், கால் இருப்பதால் தானே அருகில் போய் அவளைப் பார்க்கும் ஆசை வந்தது,'' என்றது. உடனே என் காலை வெட்டி எறிந்து விட்டேன்,'' என்றார்.

<இந்தக் கதையில் வருவது போல, பணி செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடும் போது, வெளிக்கவர்ச்சிகள் இழுக்கத்தான் செய்யும். மனதைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மீண்டால் தான் லட்சிய இலக்கை எட்ட முடியும்.






      Dinamalar
      Follow us