sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தாசன்.... இவன் மட்டுமே தாசன்

/

தாசன்.... இவன் மட்டுமே தாசன்

தாசன்.... இவன் மட்டுமே தாசன்

தாசன்.... இவன் மட்டுமே தாசன்


ADDED : ஜூலை 15, 2011 11:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவனை எஜமானாகவும், தன்னை அவருக்கு சேவை செய்யும் வேலைக்காரனாகவும் இருப்பதை 'தாச பக்தி' என்பர். இதற்கான கர்ண பரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது.

ராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் குறிப்பறிந்து செய்து வந்தார். ராமபிரானுடன் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர்.

ஒரு நாள் ராமபிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், 'அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடமும் தெரிவித்தனர்.

''சுவாமி! உங்களுக்குரிய சேவைகளை அனுமன் மட்டுமே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை

நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும்! என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமர் அனுமதி வழங்கினார்.

காலையில் ராமர் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்று தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர்.

''எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா?'' என்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ''ஆம்'' என்றனர். ராமர் புன்னகைத்து, ''இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா?'' என்று கேட்டார். அவர்களோ, ''அப்படி ஒரு நிலை வராது. நாங்கள் மிகத்துல்லியமாக தங்களுக்குரிய சேவைகளை ஒன்று விடாமல் சேர்த்துள்ளோம்,'' என்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.

அனுமனுக்கு ராமரின் உத்தரவு தெரிய வந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதாதேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு பெருத்த சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

அன்று அனுமன், ராம... ராம... என்று ஜபித்தபடியே. ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்று கவனித்தார்.

பகலில் எல்லா சேவையும் குறைவின்றி நடந்தது. இரவில் ராமபிரான் உறங்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதா வந்தாள். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சும் இல்லை, அசைவும் இல்லை.

தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள். பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தனர். ''அண்ணா, அண்ணா'' என்று பதறினர். அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, ''இது நோயாகத் தெரியவில்லையே,'' என்று கிளம்பிவிட்டார்.

அனுமனை அழைக்கலாமா என்று அவர்களுக்கு தோன்றியது. ஆனாலும், குலகுரு வசிஷ்டரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவர் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை.

கடைசியில் வசிஷ்டர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்! என்றார். உடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.

ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் சொடக்குப் போடுவார். அதன்பிறகே என் வாய் மூடும், இது உங்களுக்கு தெரியாது அல்லவா,'' என்றார்.

''இப்படி ஒன்று இருக்கிறதா?'' என்ற அவர்கள், ''இனிமேல் அவருக்கு சேவை செய்ய உனக்கு மட்டுமே முழுத்தகுதியுண்டு, தாச பக்தி சேவையில் உனக்கு நிகர் நீயே,'' என்று அனுமனைப் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us