தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நம்பிக்கை துரோகம் செய்யாதே!

நம்பிக்கை துரோகம் செய்யாதே!

நம்பிக்கை துரோகம் செய்யாதே!


ADDED : செப் 29, 2015 11:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2015 11:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மகுப்தன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வழி தவறிய அவன், தன்னுடன் வந்த வீரர்களை விட்டுப் பிரிந்தான். நீண்ட நேரம் தேடியும் அவர்களைக் காணவில்லை. இருள் சூழ்ந்தது. இரவைக் கழிக்க, ஒரு ஆலமரத்தின் மீதேறி அமர்ந்தான். அப்போது அங்கு சிங்கம் ஒன்று கரடியை விரட்டி வந்தது. அந்த கரடி மரத்தின் மீதேறியது. அதைக் கண்ட மன்னன் பயத்தில் நடுங்கினான்.

'மன்னா! பயப்படாதே. இரவு முழுவதும் நானும் உன்னுடன் மரத்தில் இருக்கிறேன். விடிந்ததும் கீழே நிற்கும் சிங்கத்திடம் இருந்து இருவருமே தப்பித்து விடலாம்,'' என்று கரடி தைரியம் சொன்னது.

அரை மனதாக மன்னன் சம்மதித்தான்.

மீண்டும் அவனிடம் கரடி, 'மன்னா! நள்ளிரவு வரை, நீ என் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொள். அதன் பின், நானும் உறங்குகிறேன். அதன்பின், கீழே நிற்கும் சிங்கம் ஏமாற்றத்துடன் குகைக்குத் திரும்பி விடும். காலையில் இருவரும் மரத்தை விட்டு கீழே இறங்கலாம்,'' என்றது கரடி.

கரடி விழித்திருக்க, மன்னன் அதன் மடியில் தலை வைத்துப் படுத்தான்.

சிங்கம் நயவஞ்சகத்துடன், 'கரடியே! மன்னனைக் கீழே தள்ளி விட்டால், பசியால் வாடும் நான் உணவாக்கிக் கொள்வேன். உனக்கும் என்னால் ஆபத்து நேராது,'' என்றது.

கரடி அதற்கு சம்மதிக்கவில்லை.

நள்ளிரவில் மன்னன் கண்விழித்ததும் கரடி தூங்க ஆரம்பித்தது.

இப்போதும் சிங்கம், 'மன்னா! நான் சொல்வதைக் கேள். கரடியைக் கீழே தள்ளி விட்டால் நான் பசியாறுவேன். அதன் பின், நீயும் பயமின்றி கீழே இறங்கலாம்,'' என்றது.

மன்னன் சம்மதித்து, கரடியைத் தள்ளி விட முயற்சித்தான். கண் விழித்த கரடி சுதாரித்துக் கொண்டது. கைகளால் இறுக்கமாக ஒரு

கிளையைப் பற்றிக் கொண்டு, 'வாக்கை காப்பாற்றாத பாவியாகி விட்டாய்! நீ இந்த காட்டில் பைத்தியமாகத் திரிவாய்,'' என்று சபித்தது.

அதன் பின் கீழே இறங்கிய கரடி முனிவராக மாறியது.

'சிங்கமே! என் பெயர் தியானகஸ்தர். தவசக்தியால் நினைத்த வடிவெடுக்கும் சக்தி எனக்குண்டு. என்னைப் போய் உணவாக்க முயற்சிக்கிறாயே. கவுதம முனிவரின் சாபத்தால், குபேரபுரி யட்சனான நீயும் காட்டில் சிங்கமாக திரிகிறாய். சுயவடிவம் பெறுவாய்,'' என்ற முனிவர் அதன் உருவம் மாறுமாறு ஆசியளித்து மறைந்தார்.

சிங்கமும் யட்சனின் வடிவம் பெற்றது.

பொழுது விடிந்ததும், மன்னனைத் தேடி வந்த வீரர்கள், அவன் பைத்தியமாக மரத்தடியில் அமர்ந்திருக்க கண்டனர்.

காட்டில் வாழும் ஜைமினி என்ற முனிவரின் உதவியை நாடினர்.

அவர் வீரர்களிடம், 'திருப்பதி சென்று மகிமை மிக்க சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஏழுமலையானைத் தரிசிக்க பைத்தியம் தீரும், '' என்றார்.

தர்மகுப்தனும் நீராடி சுய உணர்வு பெற்றான். நன்றியுடன் ஏழுமலையானுக்கு திருப்பணி செய்தான். நம்பிக்கை துரோகம் செய்பவன் பைத்தியமாக அலைய நேரிடும்...புரிகிறதா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us