தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சிரத்தையா செய்யுங்க!

சிரத்தையா செய்யுங்க!

சிரத்தையா செய்யுங்க!


ADDED : ஜன 30, 2023 12:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2023 12:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைஅமாவாசையன்று முன்னோரை வழிபடுவது குறித்து காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும்.

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களின் முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று வேதமாதாவும் பெற்றோரை வழிபட வேண்டும் என வழிகாட்டுகிறாள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என அவ்வையாரும் வலியுறுத்துகிறார்.

வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் ஏதும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் 'பித்ரு காரியம்' செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. இதில் இடம் பெறும் எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன.

முன்னோர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே 'சிரத்தையோடு செய்வது' என்பது பொருள்.

முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us