ADDED : மார் 31, 2017 02:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தினான். போகும் வழியில் அவள் கோதாவரி நதியிடம், 'அம்மா கோதாவரி! நீயும் பெண். நானும் பெண். எனக்கு நேர்ந்த துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாயே!” என்றாள். ராமனும் அவளைத் தேடும் போது, கோதவரி நதியிடம் 'தாயே அவளைப் பார்த்தாயா?” என்று கேட்டார். ராவணன் மீது கொண்ட பயத்தால் கோதாவரி உண்மையைச் சொல்லவில்லை. நமக்கு நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, அடுத்தவர்க்கு நன்மை பயக்கும் விஷயங்களில் அமைதி காப்பது குற்றம்.
இதனால் ஏற்பட்ட பாவத்தை கலியுகத்தில் கோதாவரி போக்கிக் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார், 'கோதா' என பெயரிட்டார். இந்த ஒரு காரணத்தால், கோதாவரிக்கு பாவம் தீர்ந்தது.