கருடனின் அவதார நாளை ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய பஞ்சமி என்று ஒரு சாராரும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று ஒரு சாராரும்
கொண்டாடுவர். முந்தைய விழாவை கருட பஞ்சமி என்றும், ஆடி சுவாதி திருநாளை கருடாழ்வார் திருநட்சத்திரம் என்றும் அழைப்பர்.
தேவர்களின் தந்தையான காஷ்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்த மகனே கருடன். இவரது அண்ணன் அருணன். இவர் சூரியனின் தேரோட்டியாக பணிபுரிபவர். பகல், இரவை பிரித்துக் காட்டும் பெரும் பணி இவரிடம் உள்ளது. இந்த கருடனே ராமாயண காலத்தில் ஜடாயுவாகப் பிறந்து ராமபிரானுக்கு சேவை செய்தார். சீதையை ராவணன் கடத்திய போது, ஜடாயு அவனை வழிமறித்து போரிட்டார். பெரும் சக்தி வாய்ந்த ஜடாயுவை ராவணன் கொன்றது ஒரு தேவ ரகசியம்.
கருடனின் அண்ணன் அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு. ஒருமுறை சம்பாதிக்கும், ஜடாயுவுக்கும் இடையில் யார் உயரப் பறப்பது என்று போட்டி நடந்தது. ஆர்வத்தில் ஜடாயு சூரியன் அருகில் செல்ல, சம்பாதி தன் சிறகுகளை விரித்து, தன் தம்பியை வெப்பத்தில் இருந்து காத்தான். ஆனால் அந்த வெப்பம் சம்பாதியின் சிறகுகளை கருக்கி விட்டது. சிறகுகள் மீண்டும் முளைக்க ராமநாமம் ஜெபித்து வந்தான் சம்பாதி. அவனுக்கு சிறகுகள் மீண்டும் முளைத்தன.ஆகையால் இருவருக்கும் ராமனின் மீது தீராத பக்தி உண்டு.
இந்த நன்றிக்கடனுக்காக, ராவணன் சீதையை தூக்கி செல்லும் போது, அவனை ஜடாயு தாக்கினான். அப்போது ராவணன் தன் வேலை ஜடாயு மீது வீசினான். சக்தி வாய்ந்த அந்த வேல் ஜடாயுவை ஒன்றுமே செய்யவில்லை. மேலும் ஜடாயு ராவணனின் மார்பிலும், தோள்களிலும் தன் பலம் மிக்க சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் கீழே விழுந்த ராவணன், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளைக் கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.
இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் சக்தி கொண்டது. அதனால் தான் ஜடாயு விழுந்தபோது மலை போல வீழ்ந்தான் என்பர்