
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரை என்ற மனைவியர். இதில் ராமனின் தாய் கோசலையும், பரதனின் தாய் கைகேயியும் தங்கள் பிள்ளைகளுக்கு பட்டம் சூட்டப்படும் என நம்பினர். சுமித்ரையோ சலனமே இல்லாமல் ஞானி போல இருந்தாள். தன் பிள்ளைகளான லட்சுமணனை ராமனுக்கு உதவியாகவும், சத்ருக்கனனை பரதனுக்கு உதவியாகவும் அனுப்பி வைத்தாள். லட்சுமணனிடம், “நீ, ராமனுக்குத் தம்பி என்ற உரிமையுடன் பழகாதே.
ஒரு வேலைக்காரனைப் போல இரு,” என்று அறிவுரை கூறினாள். இவ்வகையில் சுமித்ரை பதவிக்கு ஆசைப்படாத தெய்வத்தாயாக திகழ்கிறாள்.