sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கல்யாண சாப்பாடு போடவா!

/

கல்யாண சாப்பாடு போடவா!

கல்யாண சாப்பாடு போடவா!

கல்யாண சாப்பாடு போடவா!


ADDED : டிச 23, 2014 12:36 PM

Google News

ADDED : டிச 23, 2014 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தி மிக்க இளைஞர் நீலோபா. பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயில் அருகில் வீடு. தம்புராவும் கையுமாக பண்டரிநாதனின் பாடல்களைப் பாடியபடி இருப்பார். நல்ல குணவதி நீலோபாவுக்கு வாய்த்தாள்.

அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பெற்றோருக்குப் பின், விவசாயத்தில் கிடைத்த சொற்ப வருமானத்தில் காலம் சென்றது. கொடி போல பெண்ணும் வேகமாக வளர்ந்தாள். நகை ஏதும் சேர்க்கவில்லையே என்று நீலோபாவின் மனைவி வருத்தப்படுவாள்.

'எல்லாம் பாண்டுரங்கன் பார்த்துக் கொள்வான்' என்பார் நம்பிக்கையுடன்.

அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளையும் அமைந்தது. முகூர்த்தநாள் குறித்தாகி விட்டது. சமையல், மேளம், பந்தல் என்று அனைவருக்கும் அச்சாரமாக முன்பணம் கொடுத்தார். உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டனர். ஆனால், சமையல்காரர்கள் மட்டும் கடைசி நிமிடம் வரை வரவே இல்லை. என்ன செய்வதென தெரியாமல் நீலோபா திக்குமுக்காடினார்.

நீலோபாவும், மனைவியும் வாசலில் ஆட்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

''பாண்டுரங்கா! இது என்ன சோதனை!'' என்று கண்கலங்கினார் நீலோபா. உறவினர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில் அழுகை பீறிட்டது.

அப்போது, வீட்டை நோக்கி யாரோ ஒருவர் வேகமாக வருவது போலிருந்தது. கலைந்த கேசம், கசங்கிய வேட்டி, துண்டு அணிந்த படி இளைஞன் ஒருவன் வந்து நின்றான். அவன் நீலோபாவிடம்,''ஐயா! உங்களைப் பார்த்தால் கல்யாண வீட்டுக்காரர் போல இருக்கு. எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?'' என்றபடி கைகளை நீட்டினான்.

''அப்பா... நானே சமையற்காரரைக் காணாமல் தவிக்கிறேன். இந்த நேரத்தில் உணவு கேட்கிறாயே...'' என்றார் நீலோபா.

''ஐயா...நீங்க அனுமதித்தால் நானே விருந்துணவை நொடியில் தயாரிப்பேன்'' என்றான் அவன்.

''தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு கிடைத்த மரத்துண்டு கிடைத்தது போல இருந்தது அவன் பேச்சு. துணிவுடன் சமைப்பதற்கு அனுமதித்தார். இளைஞன் ஒரு வேண்டுகோள் விடுத்தான். ''சிறிது நேரத்திற்கு யாரும் சமையல்கட்டிற்குள் வரக்கூடாது. அதற்குள் உங்களுக்குத் தேவையான உணவு தயாராகி விடும்,'' என்று சொல்லி விட்டுச் சென்றான்.

என்ன ஆச்சரியம்! முகூர்த்த வேலைகள் நடந்து கொண்டிருக்க, உணவும் தயாரானது. அனைவரும் வயிறார சாப்பிட்டுப் பாராட்டினர்.

திருமணச்சடங்கில் ஈடுபட்டிருந்த நீலோபா, நன்றியை தெரிவிக்க இளைஞனை தேடினார். அவனைக் காணவில்லை.

''மாயமாக இருக்கிறதே...'' என்றபடி கோயிலை நோக்கி ஓடினார்.

கண்களையே நம்ப முடியவில்லை. இளைஞனின் கசங்கிய வேட்டியும், துண்டும் ரங்கனின் இடுப்பில் இருந்தது. அங்கே வந்தது பாண்டுரங்கனே என்பதை அறிந்து பக்தியுடன் கீர்த்தனைகள் பாடினார்.

பாண்டுரங்கனின் லீலையை அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.






      Dinamalar
      Follow us