sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொர்க்கமும் நரகமும் நம் வசமே!

/

சொர்க்கமும் நரகமும் நம் வசமே!

சொர்க்கமும் நரகமும் நம் வசமே!

சொர்க்கமும் நரகமும் நம் வசமே!


ADDED : நவ 12, 2021 01:07 PM

Google News

ADDED : நவ 12, 2021 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜில்லென்ற காலைப் பொழுதில் நான் ஜாகிங் சென்று கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நபரை கவனித்தேன்.

அவர் ஓடும் வேகத்தைப் பார்த்த போது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை யூகித்தேன். உற்சாகமுடன் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது சிறிதாக எங்களுக்கு இடையே துாரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடத்திற்கு பிறகு எங்களுக்குள் 100 அடி இடைவெளி தான் இருந்திருக்கும். அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வேகத்தை இன்னும் அதிகரித்தேன். இறுதியாக அவரைக் கடந்து விட்டேன். 'அவரைக் கடந்து விட்டேன்' என எனக்குள் பெருமிதம் ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அந்த நபருக்கு நான் போட்டி போட்டது கூடத் தெரியவில்லை. இயல்பாக ஓடிக் கொண்டிருந்தார். அவரைக் கடப்பதில் கவனம் செலுத்தியதால் நான் உணர்ந்த விஷயங்கள்...

* என் வீட்டுக்கு செல்லும் வளைவில் நான் திரும்பவில்லை.

* என் பெருமை சிறிது நேரத்தில் காணாமல் மறைந்தது.

* போட்டி மனப்பான்மையால் அமைதி, நிம்மதியை இழந்தேன்.

* சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்தேன்.

* தியானத்தின் மூலம் நான் பெற்ற சக்தியை தொலைத்தேன்.

* அவசரத்தால் கால்கள் இரண்டு முறை இடறின. நல்ல வேளையாக தப்பித்தேன்.

அப்போது தான் மனதிற்குள் இந்த எண்ணம் முளைத்தது.

நம்முடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்களுடன் போட்டி போடுகிறோம். அவர்களை விட வெற்றியாளராக வாழ்ந்து காட்ட வேண்டும் என எண்ணி மகிழ்ச்சியை தொலைக்கிறோம். நம் நேரம், திறமை, ஆற்றல் என அனைத்தையும் போட்டி மனப்பான்மையால் வீணாக்குவதால் சேர வேண்டிய உண்மையான இலக்கை அடையத் தவறுகிறோம். ஆரோக்கியமற்ற போட்டி ஒரு முடிவுக்கு வராமல் சக்கரம் போல தொடர்ந்து மனக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

எப்போதும் உங்களுக்கு முன் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னேறிக் கொண்டிருப்பார்.

உங்களை விட அவர்கள் நல்ல வேலை, கார், வங்கியில் நிறைய பணம், உயர்ந்த படிப்பு, அன்பான மனைவி, பண்பான கணவர், குழந்தைகள், நல்ல சுற்றுப்புற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்....ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நீங்கள் யாருடனும் போட்டியிடாத போது நீங்கள் நீங்களாகவே இருக்கும் போது தான் மிகச் சிறந்த மனிதர் ஆகிறீர்கள்.

சிலர் கவனத்தை திசை திருப்பி அடுத்தவர் எப்படி இருக்கிறார்கள். எங்கே செல்கிறார்கள்.என்ன உடுத்துகிறார்கள். எந்த வாகனத்தில் செல்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதால் எப்போதும் நிம்மதியின்றி இருக்கின்றனர்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை அப்படியே ஏற்க பழகுங்கள். கடவுளின் ஆசி பெற்றவர் நீங்கள் என்பதை உணருங்கள்.

விழிப்புடன் ஆரோக்கியமான வாழ்வு நடத்துங்கள். நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாரும் நமக்கு போட்டி இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்க்குரியது. ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையும் ஒப்பீடு செய்வதும் மகிழ்ச்சியை காணாமல் போகச் செய்யும்.

மற்றவரை அலட்சியமாக எண்ணினால் முடிவில் நாம் அலட்சியப்படுத்தப்படுவோம்.உங்களை நீங்களே முழுமையாக ஏற்றுக் கொண்டு அமைதியாக, ஆனந்தமாக வாழுங்கள்.

வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் கையில் தான் உள்ளது.






      Dinamalar
      Follow us