
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிருங்கி முனிவர் அம்பாள் பார்வதியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய வேண்டி தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சக்தியும் சிவமும் ஒன்றே என்ற உண்மையை பிருங்கி உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர். அந்த நெருப்பு மலையாக மாறியது. அதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

