அருளாளர் வாழ்வினிலே...: வித்தை காட்டி பிழைச்சுக்கோ!
அருளாளர் வாழ்வினிலே...: வித்தை காட்டி பிழைச்சுக்கோ!
ADDED : ஏப் 13, 2019 10:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வித்தைக்காரன் குரங்கை ஆட்டுறதைப் போல என்னைப் படுத்துறியே' என மனதை புண்படுத்தும் போது சிலர் வருத்தப்படுவதுண்டு.
ஆனால் மகானான ஆதிசங்கரர் 'என்னை வைச்சு வித்தை காட்டி பிழைப்பு நடத்திக்கோ!' என ஆவலுடன் வேண்டுகிறார்.
''பரமேஸ்வரா! வெறுமனே கையில் மண்டை ஓட்டை வைத்து பிச்சை கேட்கிறாயே! அதற்கு பதிலாக என் குரங்குமனசை பக்தி என்னும் கயிறால் கட்டி, உன் கையில் பிடித்துக் கொள். நானும் கட்டுப்பட்டு நடப்பேன். குரங்காட்டி போல என்னை வைத்து வித்தை காட்டி நீ பிழைத்துக் கொள்ளலாம். எனக்கும் பிறவிப்பிணி தீரும்'' என வேண்டுகிறார்.
பக்தி என்னும் கயிறால் கட்டும் வித்தைக்காரன் சிவனை சரணடைந்தால் பிறவாத நிலையை அடையலாம்.