ADDED : மே 03, 2019 02:57 PM

கடலுார் மாவட்டம் வடலுாரில் வள்ளலாருக்கு கோயில் கட்டும் பணி வாரியார் தலைமையில் நடந்தது. வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாததால், தன் நகைகளை 3500 ரூபாய்க்கு அடகு வைத்து கூலியை கொடுத்தார் வாரியார். இந்நிலையில் அங்கு வந்த ராஜமாணிக்கம் என்பவரிடம், ''உங்கள் ஊரில் எனது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து திருப்பணிக்கு உதவுங்கள்'' என வாரியார் கேட்க அவர் சம்மதித்தார். ஆனால் அன்று மழை கடுமையாக பெய்தது. இருந்தாலும் மழை நின்றதும், தென்னங்கீற்றுகளை பரப்பி அதில் அமர்ந்து பேச்சைக் கேட்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் சன்மானமாக பழங்கள், வெற்றிலை பாக்குடன் பணம் கொடுத்தார் ராஜமாணிக்கம். 500 ரூபாய் சன்மானம் பெறும் வாரியார், ஆயிரமாவது பெற வேண்டும் என எண்ணியிருந்தார். சன்மானத் தொகையை எண்ணிப்பார்த்தபோது, அடகு வைத்த தொகையான 3500 ரூபாய் இருப்பதை கண்டு மகிழ்ந்தார்.