sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஏழையின் சிரிப்பினிலே...

/

ஏழையின் சிரிப்பினிலே...

ஏழையின் சிரிப்பினிலே...

ஏழையின் சிரிப்பினிலே...


ADDED : நவ 22, 2021 10:59 AM

Google News

ADDED : நவ 22, 2021 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டுரங்கனின் பக்தரான ராமதேவ் மூடை துாக்கி பிழைத்து வந்தார். வறுமையில் வாடினாலும் பிறருக்கு உதவும் மனம் அவருக்கு இருந்தது. ஆண்டுக்கொரு முறை பண்டரிபுரம் சென்று சுவாமிக்கு வேட்டி சாத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் சேமித்தார். அதில் ஒரு நுால் வேட்டியும், அங்கவஸ்திரம் மட்டுமே வாங்க முடிந்தது. அதை எடுத்துக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி புறப்பட்டார். காட்டு வழியில் பெரியவர் ஒருவரைச் சந்தித்தார். ''தாங்கள் எங்கு செல்கிறீர்கள்” என பெரியவர் கேட்க 'பண்டரிபுரம்' என்றார் ராமதேவ்.

''அங்கு தான் நானும் செல்கிறேன். பண்டரிபுரம் செல்லும் குறுக்குப் பாதை ஒன்று இருக்கிறது” என்றார் பெரியவர். ராமதேவ் சம்மதிக்க பேசிக் கொண்டே இருவரும் நடந்தனர். களைப்பே தெரியவில்லை. பண்டரிபுரத்திற்கு அருகில் ஓடும் சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.

பண்டரிநாதனுக்காக இருந்த வேட்டியை ஒரு பையிலும், தான் உடுத்தும் வேட்டியை வேறொரு பையிலுமாக வைத்திருந்தார் ராமதேவ். பைகளை கரையில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். பெரியவரும் ஆற்றுக்குள் இறங்கினார். தான் அணிந்திருந்த வேட்டியை அலசி காய வைத்தார் ராமதேவ். பெரியவரோ துவைக்க முடியாமல் சிரமப்பட்டதால் அவரது வேட்டியையும் ராமதேவ் துவைத்தார். ஏற்கனவே கிழிந்திருந்த பெரியவரின் வேட்டி மேலும் கிழிந்தது. துண்டுடன் கரையேறிய பெரியவர், ''என் வேட்டி காய்ந்து விட்டதா” எனக் கேட்டார்.

''ஐயா... நான் அடித்து துவைத்ததில் உங்களின் வேட்டி கிழிந்து விட்டது'' என்றார். ''உடுத்த வேட்டியில்லையே என்ன செய்வேன்'' என கவலைப்பட்டார் பெரியவர்.

''கவலை வேண்டாம். பாண்டுரங்கனுக்காக நான் கொண்டு வந்த வேட்டியை உடுத்துங்கள்'' என்றார் ராமதேவ்.

அதை உடுத்த மறுத்தார் பெரியவர்.

''ஐயா... பாண்டுரங்கனுக்கு விலை உயர்ந்த ஆடைகளை கொடுக்க பல பக்தர்கள் காத்திருக்கின்றனர். முன்பு ஒருமுறை நுால் வேட்டி கொடுத்த போது அதை சுவாமிக்கு அணிவிக்காமல், 'பட்டு வேட்டி தான் பாண்டுரங்கனுக்கு அழகு. நுால் வேட்டியை யாருக்காவது தானம் கொடுங்கள்' என அர்ச்சகர்கள் மறுத்தனர். இப்போதும் நுால் வேட்டி தான் எடுத்து வந்துள்ளேன். அதை உங்களுக்குக் கொடுப்பதில் தவறில்லை. ஏழையின் சிரிப்பில் தானே பாண்டுரங்கன் இருக்கிறார்'' என்றார் ராமதேவ். பெரியவரும் சம்மதிக்க வேட்டியை கட்டி விட்டதோடு அங்கவஸ்திரத்தையும் ராமதேவ் அணிவித்தார்.

''ஆஹா! பார்ப்பதற்கு பாண்டுரங்கனைப் போலவே இருக்கிறீர்கள்” என பாராட்ட பெரியவர் புன்னகைத்தார். இருவரும் நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு பண்டரிபுரம் கோயிலுக்குள் நுழைந்தனர். ராமதேவுக்கு பின்னாலேயே பெரியவர் வந்து கொண்டிருந்தார்.

கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சன்னதிக்கு அருகில் செல்லும் போது பெரியவரைக் காணவில்லை. சுவாமியை தரிசித்து விட்டு தேடிப் பார்க்கலாம்'' என ராமதேவ் நடந்தார். கருவறையில் பாண்டுரங்கனைக் கண்டதும் வியப்பில் ஆழ்ந்தார். அவர் கொடுத்த நுால் வேட்டி, அங்க வஸ்திரத்துடன் சுவாமி காட்சியளித்தார்.

''பகவானே! இவ்வளவு நேரமும்

என்னுடன் உறவாடியது நீ தானா....

இந்த எளியவனின் ஆடையை

மனமுவந்து ஏற்றுக் கொண்டதும் நீ தானா...என்னே உனது கருணை” என அழுதபடி நின்றார்






      Dinamalar
      Follow us