sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!

/

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!


ADDED : செப் 03, 2014 05:03 PM

Google News

ADDED : செப் 03, 2014 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்து கொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது. ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான்.

பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார்.

''சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும், அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?'' என்று கேட்டார்.

மகான் சிரித்தபடி, ''சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?''

''சுவாமி... எனக்கு அவ்வளவா வசதி போதவில்லை. அதனால், என் தங்கை அவர்களைக் கவனித்துக் கொண்டாள்,'' என்றார்.

உடனே மகான், '' பிள்ளைகளுக்கு பெற்றோரே முதல் ஆசிரியர். நீ உன் பெற்றோரை கவனிக்கவில்லை. உன் பிள்ளையும் அப்படியே உன்னை நடத்துகிறான். பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, பெற்றவர்களை நீ புறக்கணித்ததால், இன்று நிம்மதியின்றி தவிக்கிறாய்'' என்று விளக்கம் அளித்தார்.

ஆம்..இன்று நீங்கள் உங்கள் பெற்றோரைக் கவனித்தால் தான், நாளை நீங்கள் முதியோர் இல்லக் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியமில்லாமல் போகும்.

-கிரிகா






      Dinamalar
      Follow us