sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அள்ளித் தந்த அன்பு நெஞ்சம்

/

அள்ளித் தந்த அன்பு நெஞ்சம்

அள்ளித் தந்த அன்பு நெஞ்சம்

அள்ளித் தந்த அன்பு நெஞ்சம்


ADDED : நவ 14, 2019 10:08 AM

Google News

ADDED : நவ 14, 2019 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1924 ஜூலை மாதம் காஞ்சி மகாசுவாமிகள் தியாகராஜர் அவதரித்த திருவையாற்றில் முகாமிட்டு, காவிரியின் வடகரையில் உள்ள புஷ்ய மண்டபத்துறை மண்டபத்தில் தினமும் பூஜை நடத்தினார்.

ஆடிப் பெருக்கு நாளில் திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டது. சுவாமிகள் இருந்த பூஜா மண்டபத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கலக்கம் அடைந்த பக்தர்கள் பூஜை செய்ய வேறிடம் செல்லலாம் என சுவாமிகளிடம் வேண்டினர்.

ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. சாதுர்மாஸ்ய காலம் என்பதால் பூஜையை இடம் மாற்ற முடியாது என்றும், விரதம் முடியும் வரை அங்கேயே தங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தண்ணீர் வரத்து அதிகமானதால் காவிரியின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைகள் மூழ்கின. உடமைகளை இழந்த ஏழைகள், மேடான பகுதியிலுள்ள மரத்தடிகளில் தங்க ஆரம்பித்தனர். அவர்களின் பரிதாப நிலை கண்ட சுவாமிகள் வருந்தினார். உடனடியாக ஸ்ரீமடத்தில் உணவு தயாரித்து அன்னதானம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சேவை நடந்தது.

அதன்பின் சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து வல்லம் என்ற ஊருக்கு விஜயம் செய்தார் சுவாமிகள். அப்பகுதியில் எச்.எம்.ஹீட் என்ற ஆங்கிலேயர் கலெக்டராகப் பணிபுரிந்தார். அவர் திருவையாற்றில் நடந்த அன்னதானம் பற்றிக் கேள்விப்பட்டு சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். மனிதாபிமானத்துடன் நடத்திய தொண்டினைப் பாராட்டி, அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார். 'சமுதாய உணர்வுடன் செயல்படும் இந்த புனிதத் துறவியை சந்தித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் ' என்றும் தெரிவித்தார்.

தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com

திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்

* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.

* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.

* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.






      Dinamalar
      Follow us