sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உயிர் கொடுத்த முருகன்!

/

உயிர் கொடுத்த முருகன்!

உயிர் கொடுத்த முருகன்!

உயிர் கொடுத்த முருகன்!


ADDED : பிப் 03, 2015 11:49 AM

Google News

ADDED : பிப் 03, 2015 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமான் குமாரிலபட்டர் என்ற பெயருள்ளவராகப் பிறந்து வைதீக தர்மத்தைக் காத்தார். இதோ! அந்த வரலாறு.

முருகப்பெருமான், குமாரிலபட்டர் என்ற பெயரில் பிரயாகையில் பிராமணராகப் பிறந்தார். வைதீக கர்மங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தார். அக்காலத்தில், புத்தமதம் பிரபலமாக விளங்கியது. அவர்கள் பிராமணர்களின் வைதீக கர்மங்களை விரும்பவில்லை. ஆனால், பிராமணர்கள் ஓதும் வேதமும் அது சொல்லும் கருத்துக்களுமே உண்மையானது என்பதை நிரூபிக்க குமாரிலபட்டர் விரும்பினார். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஏனெனில், புத்த மதத்தினர் பிராமணர்களை தங்கள் பக்கம் அணுக விடுவதே இல்லை. அவர்களது விஹார்களிலும்(புத்தர் கோயில்) அனுமதிப்பதில்லை.

ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டுமானால், அதீத முயற்சிகளை எடுத்தே ஆக வேண்டும். குமாரிலபட்டர் என்ன செய்தார் தெரியுமா? வேதங்கள் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமானால், எதிராளியின் மதம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எனவே புத்தமதக் கருத்துக்களை அறிந்து கொண்டாக வேண்டும் என்பதற்காக, தன்னை ஒரு புத்த பிட்சு போல் உருமாற்றிக் கொண்டு, எப்படியோ அவர்களது விஹாருக்குள் நுழைந்து விட்டார். அங்கிருந்த குருவிடம் புத்தமதம் பற்றி சகலமும் அறிந்து தேர்ச்சி பெற்றார். இதன்பின்பே, அவர் ஒரு பிராமணர் என்ற உண்மையை மற்ற புத்த பிட்சுகள் தெரிந்து கொண்டனர்.

தன்னைப் பற்றிய உண்மையை மறைத்து, தங்கள் மதம் பற்றி தெரிந்து கொண்டதற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்க அவர்கள் முடிவெடுத்தனர். அவரை ஏழாவது மாடியில் இருந்து தள்ளி விட்டனர். குமாரிலபட்டர் கீழே விழும்போது, ''நீங்கள் சொல்வது

உண்மையானால், என் உயிர் போகக்கூடாது,'' என்று வேதங்கள் மீதே ஆணையிட்டார். அதன்படியே அவர் சிறிய காயத்துடன் பிழைத்தும் கொண்டார்.

பிறகு புத்த மதத்தினருடன் வாதம் செய்து, வேதங்கள் கூறும் கருத்தே உண்மை என்பதை நிரூபித்தார். இருப்பினும், மனசாட்சி உறுத்தியது. 'தான் முருகனே என்றாலும், மனிதனாய் பிறந்ததால் தகிடுதத்தம் செய்து பிற மதக் கருத்துக்களைக் கற்றோமே! தனக்கு

கற்றுத் தந்த குருவுக்கு துரோகம் செய்து விட்டோமே!' என வாடினார். குரு துரோகத்திற்குரிய தண்டனையை தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள விரும்பினார்.

சாஸ்திரங்களைப் புரட்டினார். குரு துரோகத்துக்கு பரிகாரம் தன் உடலை தானே வருத்திக்கொள்வது என்று சொல்லப்பட்டிருந்தது. அதைப் படித்த குமாரிலபட்டர், உமியில் நெருப்பு மூட்டி அதனுள் இறங்கினார். இதைக் கேள்விப்பட்ட ஆதிசங்கரர் அங்கே விரைந்தார். ஆச்சாரியாரின் பாதம் அந்த இடத்தில் பட்டவுடனேயே சுட்ட தீ குளிர்ந்தது. ஆனாலும், உடல் கருகிக் கொண்டிருந்தது. ஆதிசங்கரர் சிவனின் அவதாரம். குமாரிலபட்டர் முருகனின் அவதாரம். தந்தையின் பாதம் பட்டதால் மகனுக்கு குளிர்ச்சி கிடைத்து விட்டது.

தந்தையுடன் பல தத்துவ விஷயங்களைப் பேசிக்கொண்டே குமாரிலபட்டர் சிவனுடன் கலந்தார்.






      Dinamalar
      Follow us